இந்த உலகில் பல இனத்தவர்களும் வாழ்கின்றனர், அவரவர்களுக்கென்று தனித்துவமிக்க கலாசார மரபுகளே அவர்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
அவ்வாறான மரபுகள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு விநோதமாகத் தோன்றும்.
அமேசன் காடுகளில் வாழும் பழங்குடி இனங்களில் மிகவும் பழமையான இனத்தவர் `மவ் பழங்குடியினர்’. இந்த இனத்தில் பிறந்தவர்கள் பின்பற்றும் மரபும் அவ்வாறு விசித்திரமான ஒன்றுதான்.
இந்த பகுதியில் ஒவ்வொரு ஆணும் பருவ வயதை எட்டியதும், எறும்பு கையுறை சடங்கில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் மவ் இனத்து ஆண்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
அதாவது ஓர் ஆண்மகன் தான் பருவ வயதை எட்டிவிட்டதாக நினைத்தால், அவன் தன் வயது நண்பர்களுடன் மருத்துவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று, மிகக்கொடிய காட்டு எறும்புகளைப் பிடித்துவர வேண்டும்.
உலகிலேயே அதிக விஷமுள்ள அந்த எறும்புகளை ஒவ்வொன்றாகப் பிடித்து, மூங்கில் கம்பில் அடைத்து எடுத்து வர வேண்டும்.
பிறகு அந்த எறும்புகளை இரண்டு கையுறைகளில் இட்டு நிரப்ப வேண்டும்.
அந்த இளைஞன், சுமார் 10 நிமிடம் தன் இரண்டு கைகளையும் அந்தக் கையுறையில் நுழைத்து வைத்திருக்க வேண்டும்.
கோபத்தின் உச்சியில் இருக்கும் காட்டு எறும்புகள், குறித்த நபரின் கைகளை ஒருவழியாக்கிவிடும்.
அதை தாங்கி கொண்டு அவன் இருந்தால்அந்த நிமிடம் முதல் அவன் மவ் இனத்தின் இளைஞனாக கருதப்படுகிறான்.