இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானவர் என பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் சாதாரண மனிதராக இயல்பாக நடந்து கொள்வது சர்வதேச நாடுகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஹெமன் ஹில் கோட்டைக்கு அண்மையில் ஜனாதிபதி மைத்திரி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சேர்த்துள்ளார்.கோட்டையில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு முன் ஜனாதிபதி அமர்ந்திருக்கும் எளிமை பலரையும் கவர்ந்துள்ளது.
மிகவும் எளிமையான அவரின் செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர். மக்களின் மனம் வென்ற ஒரே தலைவர் எனவும், நாட்டின் சிறந்த தலைவர் எனவும் ஜனாதிபதியை பாராட்டி பலரும் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.