Loading...
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Loading...
‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதனால், இரண்டாவது பாகத்திலும் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் நடித்த படங்களான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...