டயட் முறையை பூர்த்தி செய்யும் முட்டையில் புரோட்டீன், ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், விட்டமின் A, D, E, K, B5, B12, B6, கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
அவ்வளவு சத்துக்களை கொண்ட முட்டையை சோதிப்பதும், அதை சாப்பிடும் முறை பற்றியுமான சில முக்கியமான விடயங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
முட்டை பற்றிய தகவல்கள் சில….
முட்டையை வாங்கும் போது, அது சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா? என்று பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் பழுப்பு நிறத்தில் இருந்தால், அது பழைய முட்டை என்று அர்த்தம்.
முட்டையை வாங்கியதும் அதை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால் அந்த முட்டையை 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது.
முட்டையை ப்ரிட்ஜில் வைக்கும் போது, அதற்குரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.
ஏனெனில் அந்த இடத்தில்தான் முட்டைக்குத் தேவையான தட்பவெப்ப நிலை சரியாக கிடைக்கும் என்பதால் முட்டை கெட்டுப் போகாது.
முட்டையைக் கையில் எடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முட்டை கீழே விழுந்து விட்டால், அதில் உள்ள நுண்கிருமிகள் மற்றும் துர்நாற்றம் வீட்டை அசுத்தமாக்கிவிடும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையின் அளவை விட இரண்டு மடங்கு நீர் ஊற்றி, அதில் முட்டைகளை போட வேண்டும். அந்த முட்டையின் கூர்மையான நுனி பகுதி பாத்திரத்தில் நிற்கும் நிலையில் இருந்தால், அது நல்ல முட்டை.
ஒரு முட்டையைக் கையில் எடுத்து காதுக்கு அருகில் வைத்து, மென்மையாக அசைத்து, 10 நொடிகள் காதருகே வைத்திருக்க வேண்டும். அதில் இருந்து சத்தம் எதுவுமே வரவில்லை எனில், அது நல்ல முட்டை.
முட்டையை உடைத்து தோசை கல்லில் ஊற்றும் போது, மஞ்சள் கரு சிறிது மேலெழும்பி இருந்தால், அது நல்ல முட்டை. அதுவே மஞ்சள் கரு தளர்வாக கீழே அமுங்கி இருந்தால், அது பழைய முட்டை.
முட்டையில் சால்மோநெல்லா (Salmonella) என்ற கிருமி இருக்கும் என்பதால், முட்டையை எப்போதும் பச்சையாக சாப்பிட கூடாது. அதனால் சமைத்து சாப்பிடுவதே நல்லது.
முட்டையை எந்த முறையில் வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால் முட்டையை சமைத்த 2 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
குளிர்ச்சித் தன்மை இல்லாத சூழலில் முட்டையை பாதுகாக்க முடியாது. எனவே முட்டை வாங்கிய 3 நாட்களுக்குள் சமைத்து சாப்பிட்டு விடுவது நல்லது.