அஜித்தின் படவேலைகள் ஆரம்பித்துவிட்டால் கிடைக்கும் ஓவ்வொரு புதுதகவல்களும் சுவாரசியங்களாக இருக்கும். படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு மறக்க முடியா பல அனுபவங்கள் கிடைக்கும்.
அவரின் படங்களில் என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு அப்படி ஒரு கிரேஸ். இதன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா. இவர் அப்படத்தின் ஷூட்டிங் நடந்துபோது கலந்துகொண்டாராம்.
அன்று இவருக்கு பிறந்தநாள் வேறு. ஆனால் இதை பெரிதளவில் கொண்டாட விருப்பம் இல்லையாம். ஸ்பாட்டுக்கு வந்த அவரை அஜித் மாடிக்கு அழைத்து சென்று அங்கே கேக் வெட்ட தயார் நிலையில் வைத்திருந்தாராம்.
ஐஸ்வர்யாவுக்கு ஒரே ஷாக். அதோடு அன்றைய நாள், அஜித் அங்கிருந்த செங்கற்களை அடுப்பாக்கி யூனிட்டில் இருந்த அனைவருக்கும் தந்தூரி சிக்கன் சமைத்து கொடுத்து விருந்து வைத்தாராம்.