பாம்புகளில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இச்சாதாரி பாம்புகள்.
இந்த பாம்பு பல உருவம் மாறும் தன்மை உடையது என்று புராணங்கள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலம் அறியப்படும் ஓரு கூற்றாகும். இது பற்றிய சில தகவல்கள் இதோ,
இச்சாதாரி பாம்பு மனித உருவம் மாறுவது உண்மையா?
இச்சாதாரி எனும் ஒருவகை பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்து, பலவித அற்புத சக்திகளை பெற்று, மனித உருவெடுத்து மனிதர்கள் மத்தியில் வாழும்.
இந்த நாகம் தன்னை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக மனித உருவெடுத்து வரும்.
இந்த நாகத்திடம் வைரத்தை விட விலை உயர்ந்த மாணிக்க கல் உள்ளது. அதை எடுக்க முயன்று பலர் பேர்கள் உயிரை இழந்துள்ளனர்.
நல்ல மனிதர்களுக்கு இந்த இச்சாதாரி பாம்புகள் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் என்றும், கெட்டவர்களை பழிவாங்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவை அனைத்தும் கட்டுக்கதையே, பாம்பின் சராசரி ஆயுட்காலமே 30 ஆண்டுகள் மட்டுமே. அதனால் எந்த பாம்புகளும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழாது, மனித உருவும் எடுக்காது என்பதே உண்மை.