பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் Noisy-le-Sec என்ற புறநகர்ப்பகுதியில் உள்ள ஆளில்லா அடுக்குமாடி வீட்டில், பசியால் வாடிய நிலையில் கைவிடப்பட்டிருந்த சிங்கக் குட்டி ஒன்றினை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த சிங்கக் குட்டியை 24 வயதுடைய ஆண் ஒருவர் வாடகைக்குப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது.
அவர் இந்த சிங்கக் குட்டியை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளார்.
சிங்கக் குட்டியுடன் அந்த நபர் செல்ஃபி எடுத்து இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.
எனினும் சிங்கக் குட்டியை மற்றொரு இடத்தில் அவர் விட்டுவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகள், குறித்த நபரை பாரிஸின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
விலங்கு நல அமைப்பு ஒன்று தற்போது அந்தக் குட்டியைப் பராமரித்து வருகிறது.
வனவிலங்கைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.