உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி ஆருஷியை கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
உ.பி. மாநிலம் நொய்டாவின் மருத்துவர் தம்பதியான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர், தம் ஒரே மகளான 14 வயது ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேமராஜை கொலை செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
கடந்த 2008ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த இரட்டைக் கொலையை உ.பி. போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என, இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரே கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மே 17 2008 – வேலைக்காரர் ரத்த வெள்ளத்தில் சடலமாக வீட்டு மாடியில் கிடந்தார்
மே 19 – இரு மரணங்களுக்கும் இடையே முன்னாள் வேலைக்காரர் விஷ்ணு சர்மாவுக்கு தொடர்பிருக்கலாம் என நொய்டா போலீஸார் சந்தேகம்
மே 21 – நொய்டா போலீஸுடன் டெல்லி போலீஸாரும் விசாரணையில் இறங்கினர்
மே 22 – இது கவுரவ கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் அவரது பெற்றோரை சந்தேகித்தனர்
மே 23 – ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 1– நொய்டா போலீஸிடம் இருந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஜூன் 13– தல்வாரின் உதவியாளர் கிருஷ்ணா கைது
ஜூன் 20– ராஜேஷ் தல்வாருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது
ஜூன் 25– ஆருஷியின் தாய் நுபுர் தல்வாருக்கும் உண்மைக் கண்டறியும் சோதனை நடைபெற்றது
ஜூன் 26– காஸியாபாத் நீதிபதியால் ராஜேஷ் தல்வாருக்கு ஜாமீன் மறுப்பு
ஜூலை 12– ராஜேஷுக்கு ஜாமீன் கிடைத்தது
2009- பிப் 15– 20 வரை ராஜேஷ் தல்வாருக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட்டது.
டிசம்பர் 29– போதுமான ஆதாரம் இல்லை என கூறி வழக்கை முடித்தது சிபிஐ. எனினும் ஆருஷியின் பெற்றோர் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளானர்
ஜன.25, 2011– காஸியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ராஜேஷ் தல்வார் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.
பிப். 9– சிபிஐ வழக்கு முடித்து வைப்பு முடிவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆருஷியின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பியது.
பிப்.21– விசாரணை நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்யக் கோரி தல்வார் அலகாபாத் நீதிமன்றத்தை நாடினர்
மார்ச் 18- ஆருஷி பெற்றோர் மனுவை அலாகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
மார்ச் 19– சுப்ரீம் கோர்ட்டில் தம்பதி மனு தாக்கல்
ஜன.9, 2012– கீழமை நீதிமன்றத்தால் ராஜேஷுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தொடர்வதாகவும், அவர் பிப்.4-ஆம் தேதி காஸியாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர் 2013– காஸியாபாத்தில் உள்ள சிபிஐவிசாரணை நீதிமன்றத்தில் தல்வார் தம்பதிக்கு இரட்டை கொலைக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து தம்பதி அலகாபாத் நீதிமன்றத்தை நாடியது.
அக்.12, 2017– இந்த வழக்கின் தீர்ப்பு இன்று விசாரணைக்கு வருகிறது