அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நாபா, சோனோமா மற்றும் யூபா உட்பட்ட சில பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டு தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் கட்டுக்கடங்காத அளவுக்கு தீயானது வேகமாக பரவியது.
இதன் காரணமாக அங்கு வசித்த இருபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஒயின் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற சோனோ மாவட்டத்தின் சான்டா ரோசா நகரில் மட்டும் 1500க்கும் மேலான வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுவரை மட்டும் 23 பேர் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் 600 பேரை காணவில்லை.
சுமார் 8 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்களும், 124 விமானங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.