இந்த உலகில் விசித்திரம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. உலகில் பிரபல்யம் அடைவதற்காகவும் தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும் மனிதன் விநோதமாக நடந்துக்கொள்கின்றான்.
ஆனால் இயற்கையாகவே சில விசித்திர பழக்கத்தினை உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் ஒருவர் பல்லி இல்லாமல் உணவு உண்ண முடியாது எனக் கூறி எல்லோரையும் வியப்படைய வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் இருக்கும் மீனா எனும் கிராமத்தில் வசித்து வரும் கைலாஸ் என்பவரே இவ்வாறு பல்லிகளையும் பல விச பூச்சிகளையும் உண்டு வருகிறார்.
தனது அன்றாட உணவில் 3 பல்லிகளை சேர்த்துக்கொள்ளும் இவர். பல்லி சூப் இல்லாமல் தன்னால் ஒரு நாளைக்கூட கழிக்க முடியாது என்கிறார்.
அத்தோடு தினமும் நித்திரைக்கு செல்லுவதற்கு முதல் ஒரு தம்ளர் பல்லி ஜீஸ் அருந்துவதாக கூறுகிறார்.
கடந்த 20 வருடங்களாக இவர் இவ்வாறு பல்லியை சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இதுவரையில் இவர் ஊர்வன பூச்சிகள் என 60 வகை உயிரினங்களை சாப்பிட்டுள்ளார்.
விசத்தன்மை உடைய பூச்சிகளை உண்டாலும் இவரின் உடம்பில் விசம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறுகின்றனர்.
இதனால் இவரை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் “விச மனிதர்“ என அழைக்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் யாரயேனும் விசத்தன்மையுள்ள புச்சிகளோ அல்லது பாம்போ தீண்டிவிட்டால் இவர் தனது வாயினால் உறிஞ்சி அவர்களை காப்பாற்றுகிறார்.