முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஸ்பைடர். இப்படம் தான் இந்தியாவிலேயே அதிகம் நஷ்டம் அடைந்த படங்களில் 3-வது இடம் என்று நாம் முன்பே கூறியிருந்தோம்.
தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படம் ரூபாய் 70 கோடி வரை நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது என்றும், ரூ 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு நேரடியாக நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
வெளியான எந்த அரங்கிலும் மூன்று நாளை தாண்டி காத்து வாங்கியது ஸ்பைடர். அதே நேரத்தில் தயாரிப்பாளரே படம் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறி வருகின்றார். எது உண்மை என்று தெரியவில்லை, எப்படியிருந்தாலும் படம் தெலுங்கில் நஷ்டம் தான் என்பது உறுதி என்று ஆந்திர சினிமா ஊடகங்கள் ஆதரப்போர்வமான தகவலை தெரிவித்துள்ளன.
மகேஷ்பாபு நடிப்பில் தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய நஷ்டம் ஸ்பைடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியான எந்த பெரிய நடிகரின் படமும் சொல்லிகொள்ளும் அளவிற்கு வசூல் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கொடுமை என்னவென்றால், மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப்படம் என்பதால் இந்த படத்தை 18 கோடி கொடுத்து வாங்கினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் 10 கோடியை கூட இந்தப்படம் வசூல் செய்யவில்லை என்பது கோலிவுட் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.