அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். அளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை வேளையில் யாழ். ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் நிலையில், ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.