மாணவி வித்தியா கொலையாளிகள் ஏழு பேரையும் பிரிந்து பல சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இதில், நான்கு கொலையாளிகளை பாதுகாப்பு காரணமாக பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதற்கமைய 2 கைதிகள் மஹர சிறைச்சாலைக்கும், மேலும் 2 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.ஏனைய மூவர் பல்லேகலை சிறைச்சாலையிலேயே விசேட பாதுகாப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட வித்தியா கொலையாளிகள் நான்கு பேரை பார்க்க அங்குள்ள கைதிகள் ஆர்வம் காட்டுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வித்தியா கொலையாளிகள் அதற்கு இணங்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நான்கு கைதிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட வித்தியா கொலையாளிகளுக்கு, அங்கிருந்த மற்றைய கைதிகள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.