Loading...
அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபாாத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.
தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.
Loading...
அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.
Loading...