டிரீம் வாரியர் பிச்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”. இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும், படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் அருண்பிரபுவையும், படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும், மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் பாராட்டினார்
அருவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது பலரும் பாராட்டுவதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.