தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (50), இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தலையில் அம்மிக்கல்லால் தாக்கப்பட்டு வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த போதும் நான்கு ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க பொலிஸ் உயர் அதிகாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து கஸ்தூரி வழக்கை மீண்டும் பொலிசார் விசாரிக்க தொடங்கினர்.
விசாரணையில், கஸ்தூரிக்கும், அவரது மருமகன் சூர்யகுமார் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததும், சில ஆண்டுகளுக்குள் சூர்யகுமார் புதிதாக வீடு கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
சூர்யகுமாரிடம் பொலிசார் விசாரித்ததில் கள்ளக்காதல் மற்றும் பணத்தகராறு காரணமாக மாமியார் கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கஸ்தூரிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.
அதே நேரத்தில் மருமகனுடனும் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
அந்த சமயத்தில் காப்பீடு மூலம் பெரிய தொகை கஸ்தூரிக்கு வந்துள்ளது, அந்த பணத்தை சூர்யகுமார் கஸ்தூரியிடம் கேட்டுள்ளார்.
மேலும், வேறு ஆணுடன் கஸ்தூரி தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது எனவும் கண்டித்துள்ளார்.
இரண்டு விடயங்களுக்கும் கஸ்தூரி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சூர்யகுமார், மாமியார் கஸ்தூரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தனது மனைவியும், கஸ்தூரியின் மகளுமான அம்முவிடமும் சூர்யகுமார் கூறியுள்ளார்.
அம்மாவின் சொத்து தனக்கு வரும் என்ற ஆசையில் இதுகுறித்து அவர் வெளியில் சொல்லவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து கொலையாளி சூர்யகுமார் மற்றும் கொலையை மறைத்த குற்றத்திற்காக அம்முவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.