றை வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கண்கலங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தந்தையாக மகனின் நிலைகண்டு தடுமாறிய மஹிந்த பெரும் கவலை அடைந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்காலையில் சிறை வைக்கப்பட்டுள்ள நாமலை, மஹிந்த ராஜபக் ஷவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக் ஷ, யோஷித ராஜபக் ஷ ஆகியோர் நேற்று சென்று பார்வையிட்டனர்.
சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த மஹிந்த ஊடகங்களிடம் கருத்து வெ ளியிடுகையில் “இந்த நாட்டு சொத்துக்களை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
விற்பனை செய்ய முயற்சிக்கும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் மீது மக்களுக்கு உரிமை உண்டு.
இன்று வடக்கில் சட்டம் இல்லை. வடக்கிற்கு தேவையான வகையிலேயே சட்டம் உள்ளது. இவர்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக அப்படி ஒன்றை செய்து கொடுத்துவிட்டு பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.
சுதந்திரம் என்பது இதுதான். இங்கு சிறைப்படுத்தப்படிருப்பது அப்பாவி மக்கள். முஸ்லிம் பிள்ளைகள், பாடசாலை மாணவர்க்ள, அப்பாவி தாய்மார்கள் இங்கு உள்ளனர்.
இது ஒரு மிகப்பெரிய குற்றமாகும்” இந்த நாட்டின் சொத்துக்களை விற்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களையே இந்த அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது.
அரசாங்கம் இந்த நாட்டின் விமான நிலையம், துறைமுகங்களை விற்கவே முயற்சித்து வருகின்றது. ஆகவே இவற்றை தடுக்க மக்களுக்கு கடமை உள்ளது.
எந்த வழியிலேனும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என்றே நாம் நினைக்கின்றோம். ஜே. ஆர் ஜெயவர்தன காலத்தில் கூட இவ்வாறு போராட்டம் செய்தவர்களை கைதுசெய்யவில்லை.
மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் இந்த அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகின்றது.
இதற்காக போராடிய காரணத்தினாலேயே எனது புதல்வர் இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.