Loading...
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாத பட்சத்தில் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அதுவரையில் இன்றைய போராட்டத்தை அடையாள உண்ணாவிரத போராட்டமாக அறிவித்து தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை 4 மணியுடன் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
Loading...