நாய்கள் தங்கி ஓய்வெடுத்து சாப்பிடுவதற்காக மட்டும் ஜேர்மனியில் ஒரு ஹொட்டல் செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது Paradiso என்ற பெயரிலான ஹொட்டல். இது மற்ற ஹொட்டல்களை போல மனிதர்களுக்கானது அல்ல.
நாய்கள் தங்குவதற்காக மட்டும் Paradiso ஹொட்டல் செயல்படுகிறது. நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் செல்லப்பிராணியை இங்கு விட்டு சென்றால் அவர்கள் திரும்பி வரும் வரை பாதுகாக்கப்படுகிறது.
வசதியான படுக்கைகள் சோபாக்கள் போன்றவைகளும் இங்கு போடப்பட்டுள்ளன. ஹொட்டலின் உரிமையாளர் பெயர் Pino.
நாய்களோடு மிக அன்பாக பழகும் Pino தன் ஹொட்டலில் தங்கும் நாய்களை தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் செல்லப்பிராணியுடன் தங்க அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் வேறு இடத்தில் தங்கி கொள்ள வேண்டும் என்பது, ஹொட்டலின் விதியாக உள்ளது.