யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு மற்றுமொரு வழக்கில் கைதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையின்படி கடத்தல், கூட்டுகற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வித்தியா வழக்கின் ட்ரயல் அட்பார் மன்றில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளுமாறு கடந்த தவணையின் போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதுவரை அந்த பிரதிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை எனவும் நீதவான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்ற காலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தரான கோபி எனும் பொலிஸாரை வெட்டுவதாகக் கூறிய வார்த்தைக்காகவே இந்த வழக்கு பொலிஸாரினால் தொடுக்கப்பட்டுள்ளது.