ரியல் எஸ்டேட் தொழில் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர் வெகுவிரைவில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் வசித்து வரும் கவுஷிக் (57) ரேணுகா (51) தம்பதிகளின் மகன் அக்ஷய் ருபரேலியா (19).
இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுஷிக் மற்றும் ரேணுகா இருவருக்குமே காது கேட்காது, காது கேளாதோர் பள்ளியில் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
பள்ளிக்கூட மாணவரான அக்ஷய்க்கு படித்து கொண்டே தொழில் செய்ய ஆர்வம் இருந்துள்ளது.
இதையடுத்து, ரியல் எஸ்டேட் தொழிலை செய்ய முடிவெடுத்த அக்ஷய் doorsteps.co.uk என்ற பெயரில் தனி இணையதளம் ஒன்றை துவக்கினார்.
உறவினர்களிடம் கடன் பெற்றே இதை செய்துள்ளார்.
பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் சொத்துக்களை விற்று அதற்கான கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் அக்ஷய் வாங்கி கொண்டார்.
தனது திறமையாலும், கடின உழைப்பாலும் ஒரே வருடத்தில் 12 மில்லியன் பவுண்ட்கள் அளவு தனது ரியல் எஸ்டேட் நிறுவன வணிக மதிப்பை அக்ஷய் உயர்த்தியுள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அக்ஷய் கூறுகையில், தொழில் தொடங்கியதிலிருந்து 100 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான சொத்துக்களை விற்றுள்ளேன்.
தற்போது பிரித்தானியாவில் 18வது மிக பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக doorsteps.co.uk உள்ளது.
Michael O Leary என்ற தொழிலதிபர் தான் என் ரோல் மாடல், அவர் வெறும் 4.99 பவுண்டுகளை வைத்து தொழில் தொடங்கி இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.
என் பெற்றோர் என்னை நினைத்து பெருமை கொள்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.