நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ஜெஸிண்டா ஆடர்ன் ( Jacinda Ardern ) பதவியேற்கவிருக்கிறார்.
நியூசிலாந்து நாட்டின் இளவயதில் பிரதமராக பதவி ஏற்கும் அந்த நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் லேபர் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டபோதும், ஆளும் கட்சியான நேஷனல் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான இடம் கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது.
பல வார பேச்சுவார்த்தைக்குப் பின், சிறு கட்சியான New Zeland First கட்சி லேபர் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.இதையடுத்து, லேபர் கட்சியின் தலைவராக மூன்று மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றவரான ஜெஸிண்டா பிரதமராகிறார்.
இதேவேளை, NewZeland First கட்சி குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது.
இதனால், எதிர்வரும் நாட்களில் குடியேற்றம் தொடர்பான கொள்கைகளை நியூசிலாந்து அரசு கடுமையாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.