மட்டக்களப்பு – ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் வசித்துவந்த இளம் குடும்ப பெண்ணும் அவரது மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களை எதிர்வரும் 1 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் – தன்னாமுனை முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகனான 11 வயதுடைய மதுசன் ஆகியோரே கொலை செய்யப்பட்டனர்.
பிரதேசத்தில் வசித்துவந்த இளம் குடும்ப பெண்ணும் அவரது மகனும் கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டனர்.
வீட்டின் கூரை வழியாக கயிற்றைக்கட்டி உள்ளே இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் இவர்களை அடித்துக்கொலை செய்தனர்.
இதனையடுத்து கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டின் அருகில் உள்ள பற்றையில் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோடாரி ஒன்றை ஏறாவூர் பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்த நிலையில் மோப்ப நாய்களின் உதவியுடன், குற்றவாளிகளை தேடும் தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட நிலையில் 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 12 பேர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 3 பேர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலே ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டனர்.