2010 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்டி ரிஸல் என்ற 2 வயது சிறுவன் செய்த செயல் அணைத்து ஊடகங்களையும் திரும்பி பார்க்க வைத்தது. தனது 2 வயதான குழந்தை பருவத்திலேயே நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகளை ஊதி தள்ளியுள்ளான் இந்த சிறுவன். கணக்கில்லாததால் அதையும் ஒரு குத்து மதிப்பாகத்தான் அவனது பெற்றோர் கூறுகின்றனர்.
சிகரெட் பழக்கம் மட்டுமில்லாமல், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் உடல் பருமனால் அவதி பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து இந்தோனேசிய அரசு இதில் தலையிட்டு குழந்தைகள் புகைபிடிப்பதை எதிர்த்து ஒரு நிலைப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் மறுமலர்ச்சி நிலையம் மூலம் ரிஸல்க்கு தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
புகை பழக்கத்திலிருந்து மீண்ட ரிஸல்கு தற்போது 8 வயதாகிறது. தற்போது யாராவது புகை பிடிப்பதற்கு சிகரெட் கொடுத்தால் ஐ லவ் காக் செடா ( ரிஸல்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் ) என்று கூறுகிறான். ரிஸல் சிகரெட் பிடித்தால் அந்த மருத்துவரின் மனது புண் படும் என்று சிகரெட்டை பிடிப்பதில்லையாம். உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ரிஸல் தற்போது அதிலிருந்தும் விடுப்பட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் நீங்கள் காணலாம். இவ்வளவு பெரிய இரட்டை ஆபத்திலிருந்து வெளிவந்துள்ள ரிசலின் ஆரோக்கியம் பெறுக வாழ்த்துக்கள்.