முன்னால் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கும் திவினெகும வாழ்வின் எழுச்சி திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்ஸிரி ரணவக்கவிற்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நிதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்தடுவ முன்னிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்தடுவ வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவினெகும திணைக்களத்திற்கச் சொந்தமான நிதியிலிருந்து 36.5 மில்லியன் ரூபாவினை மோசடி செய்து இரும்பு குழாய்களை தேர்தல் பிரசாரத்திற்காக விநியாகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மீது பாரிய நிதிமோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது