தொழில்நுட்பத்துடன் அபிருத்தியடைந்து வரும் உலகுடன் இணைந்து ஸ்ரீலங்காவும் பயணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
13 வருடகால பாடசாலை கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக பின்லாந்தின் கல்வி முறையை ஆராய்ந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவாலை வெற்றிக் கொள்வதற்கு நாட்டை பலப்படுத்தவுள்ளடன், இலங்கையின் சகல துறைகளையும் நவீனமயப்படுத்தும் வேலை திட்டங்களும் ஆரம்பமாகியுள்ளதாகவம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நவீன மயப்படுத்தலுடன் இணைந்து பயணிப்பது அவசியமானதுடன், அதிலிருந்து விலகி செல்ல முடியாதென்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.