சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அம்பகமுவ சபைக்குற்பட்ட பகுதியிலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பிரதேச சபைக்குள் புனித பூமியான சிவனொளிபாதமலை உள்வாங்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல தயாராகி வருவதாக மலையக முற்போக்கு மக்கள் இயக்கத்தின் தலைவரும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமாகிய எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.
கினிகத்தேன பௌத்தவிகாரையில் நேற்று (28.10.2017) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேசசபை, மஸ்கெலியா நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் என மூன்றாக பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பிரிக்கப்படுவதனால் சிங்கள் மக்கள் அதிமாக வாழும் அம்பகமுவ பிரதேச சபை பகுதியிலிருந்து பிரிந்து சிவனொளிபாதமலை தமிழ் மக்கள் அதிகம் வாழும் மஸ்கெலியா பிரதேச சபை பகுதிக்குள்ள உள்வாங்கப்படுவதனால் சிவனொளிபாதமலை சிங்கள் மக்கள் கைகளை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்ட அனுமதிக்க முடியாது அவ்வாறு மஸ்கெலியா பிரதேச சபை பகுதிக்குள் சிவனொபாதமலை செல்லும் இடத்து அதற்கு எதிராக நீதிமன்ற உதவியை நாட நடவடிக்கை எடுத்து வருவதாவும் தற்போது மூவின மக்களும் ஒன்றுமையாக வாழும் அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஒற்றுமை குழையும் வாய்ப்புகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதனால் அம்பகமுவ பிரதேச சபையை துண்டாட அனுமதிக்க போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.