Loading...
2018 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய 5 பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பொருட்கள் தற்போது அரசாங்க விலை கட்டுப்பாட்டின் கீலுள்ள பொருட்கள் என கூறப்படுகின்றது.
அதனை தவிர சீ.சீ 1000 தரத்திற்கு குறைந்த சிறிய வாகனங்களின் விலையும் குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...
அதற்கான வரி எதிர்வரும் காலங்களில் ஏதாவது விலை பட்டியலுக்கமைய அறவிடப்படும் என அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 9ஆம் திகதி அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...