பெருந்தோட்ட மக்களுக்கு காணியுடனான தனிவீட்டு அலகை வழங்குவதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ள புதிய கிராம வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணி இன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 2864 பேருக்கு காணி உறுதிகள் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஹட்டன் ‘டன்பார்’ விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் வைபவத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது நுவரெலியா, குட்வில் தோட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் பிரதமர் தலைமையில் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தின் கீழ் மாத்தறை, ஹுலந்தாவ தோட்டத்தில் உள்ள மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
மூன்றாவது கட்டமான இன்றைய நிகழ்வில் அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், நவீன் திசாநாயக்க, கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.