இந்தி நடிகை ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பிறகு இங்கு தனியாக தங்கி இருக்கிறார்.
இந்த கட்டிடத்தில் சில தினங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஐஸ்வர்யாராய், பதட்டத்துடன் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சென்று தனது தாயாரை சந்தித்தார்.
அப்போது அபிஷேக் பச்சன் தனது மாமியார் பிருந்தாவிடம், “இனி நீங்கள் எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். இந்த கட்டிடத்தில் தனியாக இருக்ககூடாது” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் மகளுடன் தங்கி இருக்க ஐஸ்வர்யா ராயின் தாயார் முடிவு செய்துள்ளார்.
ஐஸ்வர்யாராயின் தந்தை இறந்த பிறகு மாமியாரை தங்களுடன் வந்து இருக்கும்படி அபிஷேக் பச்சன் வற்புறுத்தினார். மகள் சொன்னதையும் பிருந்தா ஏற்கவில்லை. தீ விபத்து ஏற்பட்டதால் மகளுடன் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யாராய் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகள் ஆரத்யாவை தாயார் கவனித்துக்கொள்வார் என்ற நிம்மதி அவருக்கு ஏற்பட்டுள்ளது.