கனடாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
பல வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சுன்னாகத்திற்குத் திரும்பிய முதியவரொருவரே இவ்வாறு திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலவருடங்களாக புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வந்த குறித்த முதியவர் கடந்த பத்து நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான சுன்னாகத்துக்குத் திரும்பியிருந்தார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள நெஞ்சு வலி காரணமாக நேற்றைய தினம்(28) உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் தியாகராஜா(வயது-86) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.