இவங்களுக்குள்ள காதல் இருக்கா இல்லையா என்று தென் இந்திய பட உலகையே குழப்பி விடுகிறது அனுஷ்கா – பிரபாஸ் ஜோடி.
பாகுபலிக்கு பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே இருக்கின்றன.
பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் தனக்கு அனுஷ்காவை ஜோடியாக்க பிரபாஸ் முயன்றதாகவும் ஆனால் அனுஷ்காவின் எடையை காரணம் காட்டி இயக்குநர் தரப்பில் மறுக்கப்பட்டு ஸ்ரத்தா கபூரை ஜோடியாக்கினார் என்றும் செய்தி வந்தது. இதனால் இயக்குநருக்கும் பிரபாஸுக்கும் மன வருத்தம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
கடந்த வாரம் பிரபாஸுக்கு 38 வது பிறந்தநாள். இதற்கு அனுஷ்காவே ஷாப்பிங் சென்று அழகான வாட்ச் ஒன்றை வாங்கி பிரபாஸுக்கு பரிசளித்தார் என்று செய்தி வருகிறது.
பிரபாஸ் படத்தில் இருந்து ரிஜெக்ட் ஆனதற்காகவே உடல் எடையை குறைக்க தீவிரம் காட்டுகிறார் அனுஷ்கா என்கிறார்கள்.
நல்லா இருந்தா சரி!