Loading...
தமிழ் மாதத்தில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் பூஜைகள் மற்றும் பரிகாரங்களை முழு மனதோடும், பக்தியுடனும் செய்து வந்தால், நமது வீட்டில் செல்வங்கள் நிறைந்து அனைத்து சுபிக்ஷங்களும், நன்மைகளும் கிடைக்கும்.
Loading...
ஐப்பசி மாதத்தில் செய்ய வேண்டியவை?
- ஐப்பசி மாத பெளர்ணமி அன்று கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
- ஐப்பசி மாதத்தில் கோஜாக்ரா எனும் விரதத்தை திருமணம் ஆகாத கன்னி பெண்கள் மற்றும் புதியதாக திருமணம் ஆன பெண்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வெறும் இளநீர் தண்ணீரை மட்டும் குடித்து விரதமிருந்து லஷ்மி தேவியை வணங்கி வழிபட வேண்டும்.
- ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும். இதனால் குழந்தை பேறு உண்டாகும், குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
- ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை, நோய்கள் நம்மை விட்டு நிங்கி, மன நிம்மதி கிடைக்கும்.
- ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி நாளில் விரதமிருந்து நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் இந்திர வாழ்வை வைகுண்டத்தில் பெறுவர். ஆனால் இந்த ஐப்பசி மாத ஏகாதசியன்று பால் சாப்பிடக் கூடாது.
- ஐப்பசி மாதக் கடைசி நாள் கடைமுகம் ஆகும். இந்த நாளில் புனித காவேரி நதியில் நீராடுவது நல்லது. இதனால் நம் பாவங்கள் கரைந்தோடும்.
Loading...