வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அயல் வீட்டிற்குள் சென்ற சிறுமியை இரு பிள்ளைகளின் தந்தையான இளைஞரொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 9ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – தெழுங்கு நகர், புதுக்குடியிருப்பு, தம்பலகமம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபரின் மனைவி வெளியில் சென்றுள்ள நிலையில் பக்கத்து விட்டு சிறுமியொருவர் சந்தேகநபரின் வீட்டு வாசலில் விளையாடியுள்ளார்.
இதன்போது, வீட்டுக்குள் வந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற நிலையில் சிறுமி தனது தாயிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை நேற்று(28) மாலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரை இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.