உலகெங்கும் ஹாலோவீன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பலரும் பலவிதமான வேடங்களை அணிந்திருப்பர்.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது,சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
குறிப்பாக சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர்.பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.
சூப்பர் மேன் Clark kent போல் ஆடை, சிகை அலங்காரத்துடன் வலம்வந்த கனடா பிரதமர் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை கவர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஹாலோவீனுக்காக வேடமணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.