நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினாலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒரு தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின், முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினாலும் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடம் தான் பிடிக்க முடியும் என்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நியூசிலாந்து அணி தொடரை 2-1 அல்லது 3-0 என கைப்பற்றினால், அந்தணி முதல் இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் இந்திய அணியை டி-20 அரங்கில் நம்பர்-1 இடத்துக்கு கொண்டு செல்லும் தலைவர் கோஹ்லியின் கனவு அம்பேலானது.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தோல்வியை தான் சந்தித்துள்ளது.