Loading...
இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை சிறிய மீன்களுக்கும் 100 ரூபாய் இறக்குமதி வரி அறவிடப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மீனவர்களின் நலனை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
Loading...
இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் அதிகரித்துள்ள நிலையில், இடம்பெற்றுவரும் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வரித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இவ்வரி விதிப்பு தொடர்பில் திரைசேரி ஒப்புதல் கோரப்பட்டுள்ள நிலையில், திரைசேரி ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் வரி அறவீடு நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...