மஹிந்த அணியான கூட்டு எதிரணி பக்கமுள்ள தமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கான விஷேட கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பலமானதொரு கூட்டணியாகவே சுதந்திரகட்சி தேர்தலில் களமிறங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அமைப்பது தொடர்பில் பங்காளிக்கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேவேளை சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட விஷேட அழைப்பை நிராகரித்த, கூட்டு எதிரணி பக்கமுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.