Loading...
யாழ்.மாவட்டத்தில் நிலவும் கிராம அலுவலர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூடிய கவனம் எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் . மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தெரிவித்தார் .
யாழ் .செயலகத்தில் கிராம அலுவலர் பரீட்சையில் சித்தி அடைந்த 160 கிராம அலுவலகர்களுக்கான நேர்முகப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் , இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Loading...
மேலும் இவ் விடயத்தில் தாமதமான செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் அனுமதிக்ககூடாது .யாழ் மாவட்டம் மட்டுமன்றி நாடு தழுவிய ரீதியில் புதிய கிராம அலுவலகர்களுக்கான நியமனங்களை வழங்கி மக்கள் சேவைக்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...