பிக்பாஸில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலுருந்து வெளியே வந்த ஆர்த்தி தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.
பாடகி பி. சுசிலா உயிருடன் இருக்கும்போது அவர் இறந்துவிட்டதாக ட்வீட்டிய நடிகை ஆர்த்தியை நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர். கானக்குயில் பி. சுசிலா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது.
இந்நிலையில் சுசிலா அமெரிக்காவில் நலமாக உள்ளதாகவும், வதந்தியை நம்ப வேண்டாம் என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். இதற்கிடையே நடிகை ஆர்த்தி அவசரப்பட்டுவிட்டார். ட்வீட்டில் இசை உலகின் கானக்குயில், கின்னஸ் சாதனையாளர் பி.சுசிலா அவர்கள் இறைவனடி சேர்தல், ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை சுசிலா அம்மாவின் உறவினர் அனுப்பினார் என்று ட்வீட்டினார் ஆர்த்தி.