திமுக செயல் தலைவர் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்வது வழக்கம், அதன்படி இன்று காலை லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
சென்னையில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீரென லண்டன் புறப்பட்டார்.
சென்னையிலிருந்து அவர் ஷார்ஜா சென்றார், ஷார்ஜாவில் புத்தக விழா ஒன்றில் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்வதோடு திமுக சார்பில் புத்தகங்களையும் வழங்குகிறார்.
பின்னர் லண்டன் புறப்பட்டுச் செல்கிறார், இரண்டு மூன்று நாட்கள் பயணத்துக்கு பின்னர் சென்னை திரும்புகிறார்.
வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நேரத்தில் திமுக செயல் தலைவர் தமிழகத்தில் இல்லாமல் இருப்பது விமர்சிக்கப்படுமே என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது லண்டன் பயணம் ஏற்கெனவே திட்டமிட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதால் செல்கிறார், இன்று முடிவு செய்து புறப்பட்டு செல்லவில்லை என்று தெரிவித்தனர்.