உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்ய இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலக அரங்கில் சவுதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை இளவரசர் முகம்மது பின் சல்மான் எடுத்துவருகிறார்.
இந்நிலையில் இளவரசர் தலைமையில் ஊழல் தடுப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டதாக சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது