யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணவன் மனைவி இருவரில், கணவருக்கு விளக்கமறியலும் மனைவிக்கு ஆள்ப்பிணையும் வழங்கப்பட்டுள்ளன.
(கோப்புப் படம்)
குறித்த சந்தேக நபர்களில் கணவனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவரது மனைவி கர்ப்பவதி என்ற காரணத்தால் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த இருவரையும், பொலிஸார் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போதே நீதிவான் சி.சதீஸ்தரன் இவ்வாறு கட்டளை வழங்கியுள்ளார்.
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் குறித்த தம்பதியர் அரியாலை மணியந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களால் அச்சிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான 400 போலி நாணயத்தாள்களும் 1,000 ரூபா பெறுமதியான 168 போலி நாணயத்தாள்களும் அந்த வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.