உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதிகாலை வேளையில் எலுமிச்சை சாறு கலந்த நீரை பருகி வந்தால் அவர்களின் உடல் எடை குறையும்.
அத்துடன் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். தினமும் எலுமிச்சை சாற்று நீரை அருந்தி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி உடல் சுத்தமாகும்.
எலுமிச்சை பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எலுமிச்சை சாறு கலந்த நீரை தயாரிக்கும் போது, எலுமிச்சையின் வெறும் சாறை மட்டும் நீரில் போடாமல், முழு எலுமிச்சையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை பருகி வந்தால் சிறந்த உடல் நலன் ஏற்படும். அதற்காக 6 எலுமிச்சைகளை பாதியாக வெட்டி பாத்திரத்தில் போட்டு, அதில் அரை லீற்றர் நீர் ஊற்ற வேண்டும். பின்னர் 3 நிமிடம் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து பின் இறக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும். பின்பு அந்நீரை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
இவ்வாறு நாள்தோறும் எலுமிச்சை நீரை பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அத்துடன் எலுமிச்சையானது தோலிற்கு இளமையூட்டி புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.