திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்திற்குச் சொந்தமான அரச நிதியை மோசடி செய்த வழக்கில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கில் முதலாவது சாட்சியாளர் தொடக்கம் ஐந்தாவது சாட்சியாளர் வரை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திவிநெகும திணைக்களத்திலிருந்த 2991 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்து அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக கூரைகளை வழங்கிய குற்றச்சாட்டு பெசில் ராஜபக்ச மீது காணப்படுகின்றது.
இந்த வழக்கில் சந்தேக நபர்களாக மேலும் மூவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஐந்து சாட்சியாளர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.