Loading...
பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகல் வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் எதிராளிகளை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை எதிர்கொண்டார். முதல் ரவுண்டில் மேரிகோமுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ரவுண்டுகளில் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய மேரி கோம் அடுத்தடுத்து தாக்க, 5-0 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம் முதல் முறையாக ஆசிய போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோமுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள் மேரி கோம். உங்களது சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.
Loading...