இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனை சிபிஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் குர்கானின் உள்ள ரயான் சர்வதேச பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் பிரதுமன் (7) கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி பள்ளிக்கூட கழிவறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான்.
இதை பார்த்த பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் இதுகுறித்து பள்ளிக்கூட தோட்டக்காரரிடம் கூறினார்.
பின்னர் பிரதுமனின் சடலம் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கழிவறையில் பிரதுமன் இருப்பதை சொன்ன பதினோராம் வகுப்பு மாணவரை பொலிசார் இவ்வழக்கில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
பள்ளியில் நடத்தப்படும் பரீட்சைகள் மற்றும் ஆசிரியர், பெற்றோர் சந்திப்பை தள்ளி வைக்கவே பிரதுமனை பதினோராம் வகுப்பு மாணவன் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பள்ளியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் மாணவர் சிக்கியுள்ளார்.
இதனிடையில், தன் மகன் கொலை செய்யவில்லை எனவும், சிபிஐ அவனை கட்டாயப்படுத்தி இதை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் கைதான மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்