சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தமது குழந்தையை தாயார் மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்று ஸ்பெயின் மருத்துவமனையில் வைத்து கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
சொந்த குழந்தையையே கொடூரமாக கொலை செய்த குறித்த தாயாருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருக்கும் Katharina Katit-Staeheli என்பவரது ஒரு வயது குழந்தை ஹைட்ரோசிஃபலஸ் என்ற ஒருவகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சூரிச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்பித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் குழந்தைக்கு அறுவைசிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.ஆனால், தமது குழந்தைக்கு அலோபதி அல்லது இந்திய மற்றும் சீனா மருத்துவம் போதும் என அவர் அடம்பிடித்துள்ளார்.
இதனிடையே மருத்துவர்கள் குழந்தையை பரிசோதிக்க வெண்டும் என நிர்பந்தித்த நிலையில், தமது குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் எனக் கூறி, குழந்தையுடன் அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு தலைமறைவான அவரை சுவிஸ் பொலிசார் சர்வதேச தேடுவோர் பட்டியலில் சேர்த்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள Costa Blanca நகரில் குறித்த தாயாரை பொலிசார் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக விரைந்தனர்.
அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் வைத்து குழந்தையுடன் சிக்கிய அவர், பொலிசாரிடம் குழந்தையின் ஆடையை மாற்றிவிட்டு வருவதாக கூறி சென்ற அவர்,கத்தியால் குழந்தையை கழுத்தை துண்டித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பொலிசாரால் மீட்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் சுவிஸ் தாயாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.