இப்போது மீண்டும் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘சார்லி சாப்ளின்-2’ தயாராக இருக்கிறது. இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டது. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடா சர்மா ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர நிக்கி கல்ராணியும் பிரபுதேவா ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.