கூகுள் நிறுவனம் அண்மைக் காலமாக பல புதிய கைபேசிப் பயன்பாடுகளை (Mobile Apps) அறிமுகம் செய்துவருகிறது.
அந்த வகையில், கூகுள் நிறுவனமானது, ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய கைபேசிப் பயன்பாடை அறிமுகம் செய்துள்ளது.
டெஸ் என்ற மொபைல் வாலட் அப்ளிகேஷன், கூகுள் அசிஸ்டெண்ட் அப்ளிகேஷன் ஆகியவை தற்போது கிடைக்கின்றன.
இந்த வரிசையில் கூகுள் நிறுவனம் விரைவில் களமிறக்க இருக்கும் கைபேசிப் பயன்பாடுதான் ஃபைல்ஸ் கோ ஆகும். இந்தப் பயன்பாடானது கோப்பு முகாமை (File Manager) மற்றும் கோப்பு பகிர்வு (File Sharing) ஆகிய வசதிகளைக் கொடுக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.
குறித்த கைபேசிப் பயன்பாடு, தற்போது கூகுள் play store’இல், மட்டும் பீட்டா (Beta) பரிமாணமாகக் கிடைக்கும். ஒரு மென்பொருள் முழுமை அடையாத நிலையில் அதை வெளியிட்டால் அது பீட்டா என அழைக்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.